வாஷிங்டன்: டொனால்ட் டிரம்ப், ஈரான் முன்வைத்த 10 அம்ச அமைதி திட்டத்தை பரிசீலித்த பிறகு, அந்நாட்டின் மீது திட்டமிடப்பட்டிருந்த குண்டுவீச்சு தாக்குதல்களை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
ஈரான், பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தொடர்பான 10 அம்ச திட்டத்தை அமெரிக்காவுக்கு முன்மொழிந்துள்ளது. இதை செயல்படுத்தக்கூடியதாக கருதப்பட்டதால், ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதற்கு முன், ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்து அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. குறிப்பிட்ட நேரத்திற்குள் உடன்பாடு ஏற்படாவிட்டால், ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாகும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், பதற்றத்தை குறைக்கும் வகையில், அடுத்த 14 நாட்களுக்கு எந்தவிதமான வான்வழி தாக்குதல்களும் நடத்தப்படாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த முடிவு, ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு அளிப்பதோடு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த போர் பதற்றத்தையும் தற்காலிகமாக குறைத்துள்ளது.
