இஸ்லாமாபாத்: ஷெபாஸ் ஷெரீப், மேற்காசிய பகுதியில் நடைபெற்று வரும் போர் காரணமாக பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பாகிஸ்தான் அணுசக்தி நாடாக உருவானது போலவே, அதே அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் நாட்டை ஒரு பொருளாதார சக்தியாகவும் மாற்ற வேண்டும்” என்றார்.
மேலும், “அணுசக்தி என்பது நாட்டின் பாதுகாப்பு சொத்து. அது பாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டியது; தாக்குதலுக்காக அல்ல. இதன் காரணமாகவே உலக நாடுகள் பாகிஸ்தானை பொறுப்பான அணுசக்தி நாடாக ஏற்றுக்கொண்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்காசிய போர் காரணமாக பாகிஸ்தான் மட்டுமல்லாமல், அந்த பிராந்தியத்தின் பல நாடுகளின் பொருளாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஷெபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.
