Iran நாட்டின் கராஜ் நகரை Tehran நகருடன் இணைக்கும் முக்கியமான பி1 பாலம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக, Donald Trump தெரிவித்துள்ளார்.
United States, Israel மற்றும் ஈரான் இடையேயான போர் ஒரு மாதத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்கா முன்வைத்த போர் நிறுத்த அழைப்பை ஈரான் நிராகரித்து, இழப்பீடு உள்ளிட்ட பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
இந்த சூழலில், கராஜ் நகரை தலைநகர் தெஹ்ரானுடன் இணைக்கும் முக்கிய பாலமான பி1 பாலம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக டிரம்ப் கூறியுள்ளார். இந்த பாலம் மத்திய கிழக்கு பகுதியில் உயரமான பாலங்களில் ஒன்றாகவும், ஈரானின் முக்கிய கட்டமைப்பு அடையாளமாகவும் கருதப்படுகிறது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட காணொலியில், “ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுகிறது; இது இனி பயன்படுத்த முடியாது. இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும். எதிர்காலத்தில் மேலும் சேதம் ஏற்படுவதற்கு முன், ஈரான் ஒப்பந்தத்திற்கு வர வேண்டும்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 95 பேர் காயமடைந்ததாகவும் Al Jazeera செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக, ஈரான் பாதுகாப்புத்துறை Tel Aviv நகரை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
