திண்டுக்கல்: “இது ஓட்டப்பந்தயம் அல்ல; ஓட்டு பந்தயம்,” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது:
“என் இனத்திற்கு ஒரு சாபம் இருக்கிறது. இதற்கு கடந்த கால காயமும் இல்லை; எதிர்கால கனவும் இல்லை; நிகழ்கால தேவையே முக்கியம்.
‘சீமான் நல்லா தான் பேசுறான்’ என்று ஒரு அம்மா கூறியிருக்கிறார். ‘இந்த தம்பி நல்லா பேசுறான்; ஆனால் ஜெயிக்க மாட்டேங்குறான்’ என்றும் அவர் சொல்கிறார்.
இது என்ன ஓட்டப்பந்தயமா நான் ஓடி ஜெயிக்க? இது ஓட்டு பந்தயம். மக்கள் ஓட்டு போட்டால் தான் ஜெயிக்க முடியும்.
மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். இலவசமாக மிக்சி கொடுத்தால், அதில் என்ன அரைப்பது? கிரைண்டர் கொடுத்தால், அதில் என்ன ஆட்டுவது? பிரிட்ஜ் கொடுத்தால், அதில் என்ன வைப்பது?
உங்கள் வீட்டில் திருடிவிட்டு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அதை வாங்குவீர்களா? மக்கள் ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்காமல் இருந்தால் எந்த மாற்றமும் வராது.
நல்ல ஆட்சி வழங்கப்பட்டிருந்தால் கூட்டணிகளும், இலவச அறிவிப்புகளும் தேவையில்லை,” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
