சென்னை: பாரதிய ஜனதா கட்சி தமிழக நிர்வாகிகள், அதிமுக தொடர்பான விவகாரங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என கட்சியின் மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜ வட்டாரங்கள் கூறுகையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு உருவாகியுள்ள அரசியல் சூழல் குறித்து கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ், தமிழக பாஜ மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது, அதிமுகவில் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இரு அணிகள் செயல்பட்டு வரும் சூழலில், அந்த விவகாரம் குறித்து தமிழக பாஜ நிர்வாகிகள் யாரும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையை கவனமாக கையாள வேண்டும் என்றும், கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் உள்கட்சி பிரச்னைகள் குறித்து தேவையற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்றும் மேலிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
