“அடுத்த 5 ஆண்டுகள் உதயநிதி கதறுவதை ரசிக்கலாம்” – கஸ்தூரி விமர்சனம்
கோவை: தேர்தல் தோல்வியை திமுக இன்னும் ஏற்க முடியாமல் இருப்பதாகவும், அடுத்த 5 ஆண்டுகள் உதயநிதி கதறுவதை ரசிக்கலாம் என்றும் நடிகையும் பாஜ பிரமுகருமான Kasthuri Shankar தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுகவினர் விஜய் அரசை திட்டுகிறார்கள் என்றால், அந்த ஆட்சியில் ஏதோ நல்லது நடக்கிறது என்பதற்கே அது சான்று,” என்றார்.
மேலும், “டாஸ்மாக் கடைகளை மூட முயற்சி செய்வது நல்ல விஷயம் தான். அதில் சில சிக்கல்கள் இருந்தாலும், இது புதிய அரசு என்பதால் அவர்களுக்கு சிறிது காலம் வழங்க வேண்டும்,” என்றும் கூறினார்.
“திருவொற்றியூரில் டாஸ்மாக் கடை மூடப்பட்டபோது, மக்கள் சாலையையே மதுக்கடையாக மாற்றிவிட்டனர். எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்ல முடியாது. மக்களும் மாற வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.
விஜய் தலைமையிலான அரசு குறித்து பேசிய கஸ்தூரி, “இந்த அரசுக்கு நல்ல எண்ணம் இருக்கிறது. ஆனால் செயல்பாடுகளில் முன்னேற சிறிது காலம் தேவை. நாமும் ஆதரவு தர வேண்டும்,” என்றார்.
அதேபோல், “அரசியல்வாதிகள் மாறலாம்; ஆனால் அதிகாரிகள் உடனே மாற மாட்டார்கள். ஆட்சி மாறினாலும் காட்சி மாற நேரம் எடுக்கும்,” என்றும் குறிப்பிட்டார்.
அமைச்சர் கீர்த்தனா குறித்து குறிப்பிட்ட அவர், “அவர் வெற்றிச் சான்றிதழையே வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டார். ஆனால் அதில் தவறு எதுவும் இல்லை. அவர்களுக்கு தவறு செய்வதையும் தெரியாது என்பதே உண்மை,” என கூறினார்.
திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து கருத்து தெரிவித்த கஸ்தூரி, “தோல்வியை ஏற்க முடியாமல் அவர்கள் நடந்து கொள்கிறார்கள். ஒரு இடத்தில் ஒரு ஓட்டு வித்தியாசத்திலும், மற்றொரு இடத்தில் 83 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்திலும் தோற்றுள்ளனர்,” என்றார்.
மேலும், “தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் Udhayanidhi Stalin அடுத்த 5 ஆண்டுகள் கதறுவதை மக்கள் ரசிக்கலாம். அதற்காகவே நான் விஜயின் பெரிய ரசிகையாகி விட்டேன்,” என்றும் கஸ்தூரி தெரிவித்தார்.
