சென்னை: மற்ற கட்சிகளில் இருந்து விலகியவர்களை இணைத்துக் கொண்டு கட்சி நடத்துவதாக த.வெ.க. தலைவர் விஜய் மீது அ.தி.மு.க. கடுமையாக விமர்சனம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க. வெளியிட்ட பதிவில் கூறியதாவது: தனியாக வந்ததாக கூறும் விஜய், தனது அரசியல் நிலைப்பாடுகளில் ஒரிஜினல் இல்லை. சினிமாவில் மற்ற முன்னணி நடிகர்களை காப்பியடித்ததுடன், அரசியலிலும் பிற கட்சித் தலைவர்களின் பாரம்பரியத்தை பயன்படுத்துகிறார்.
தி.மு.க. ஆட்சியின் குறைபாடுகள் குறித்து அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு முன்வைத்த கருத்துகளை காப்பியடித்து பேசுகிறார். சொந்தமாக கருத்து தெரிவிக்க முடியாதவர், பிறர் வரலாற்றை குறித்து கேள்வி எழுப்புவது பொருத்தமற்றது.
மற்ற கட்சிகளில் இருந்து விலகியவர்களை இணைத்துக் கொண்டு கட்சி நடத்தும் நிலையில், பிற கட்சிகளை கலைக்க சவால் விடுப்பது சிரிப்பாக உள்ளது. விஜய்க்கு அரசியல் புரிதலும் வரலாற்று அறிவும் இல்லை.
அ.தி.மு.க. தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். திரைப்பட டிக்கெட் விலை குறித்து கேள்வி எழுப்பியதுடன், விஜய் மீது கடும் விமர்சனமும் பதிவில் இடம்பெற்றுள்ளது.
