திருப்பூர்: திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி மார்ச் 2ஆம் தேதி கிரிவலம் செல்ல இருப்பதாக ஹிந்து முன்னணி அறிவித்துள்ளது.
முன்னதாக, தடையை மீறி தீபம் ஏற்ற திட்டம் இருப்பதாக தகவல் வெளியானது. இதனை மறுத்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் எந்த திட்டமும் இல்லை. முருகனின் முதல் படை வீடாக கருதப்படும் திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்ல அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.
தீபம் ஏற்றும் நடவடிக்கை பற்றிய தகவல்கள் வெளியானால், அரசு தரப்பில் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், கிரிவலம் மட்டும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
