சென்னை: தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் மார்ச் 12 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி அண்மையில் மேற்கு வங்க மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கேரள மாநில கவர்னராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகருக்கு தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக மார்ச் 11 ஆம் தேதி ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் சென்னை வர உள்ளார். அதே நாளில் ஆர்.என். ரவி தனது பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்துவிட்டு கொல்கத்தாவுக்கு புறப்பட உள்ளார்.
அப்போது கவர்னர் மாளிகை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவரை வழியனுப்பி வைக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து மார்ச் 12 ஆம் தேதி முற்பகல் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
