2026–27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 01) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து சிறப்பு அலசல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள ‘டாப் 25’ முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:
-
தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், அஸ்தினாபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் கலாசார மையங்கள் அமைக்கப்படும்.
-
நாடு முழுவதும் 7 நகரங்களில் அதிவேக ரயில் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். சென்னை–பெங்களூரு, சென்னை–ஹைதராபாத், பெங்களூரு–ஹைதராபாத், புனே–ஹைதராபாத், மும்பை–புனே உள்ளிட்ட வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும்.
-
பழவேற்காடு ஏரியில் பறவை கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.
-
தமிழகத்தில் அரியவகை கனிமங்களுக்கான வழித்தடத் திட்டம் செயல்படுத்தப்படும்.
-
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முதலீட்டு வரம்பு 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்படும்.
-
இந்தியாவில் உள்ள டேட்டா மையங்களுக்கு 2047 ஆம் ஆண்டு வரை வரி விலக்கு அளிக்கப்படும்.
-
மகாத்மா காந்தி கிராம ஸ்வராஜ் என்ற பெயரில் காதி, கைத்தறி, கைவினைப் பொருட்கள் துறைக்கு உத்வேகம் அளிக்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கதர், கைத்தறி, கைவினைப் பொருட்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகள் கிடைக்கும்.
-
மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
புற்றுநோய்க்கான 12 உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
7 அரியவகை நோய்களுக்கான மருந்துகளுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
விமான உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.
-
தனிநபர் வருமான வரியில் இந்த ஆண்டு எந்த மாற்றமும் இல்லை. வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் இறுதிக்கு பதிலாக மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
வெளிநாடு சுற்றுலா பேக்கேஜ்களுக்கு 2 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது.
-
மும்பையில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து, நாடு முழுவதும் 15 ஆயிரம் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் அனிமேஷன் கன்டென்ட் கிரியேட்டர் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
-
மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை தயாரிக்க ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
-
மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்கும் வகையில் நாடு முழுவதும் 5 மருத்துவ முனையங்கள் அமைக்கப்படும்.
-
இந்தியாவின் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்ய ஆயுர்வேத மையங்கள் அமைக்கப்படும்.
-
பல முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா வழிகாட்டிகளை உருவாக்க புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
-
நாடு முழுவதும் மாவட்டம் தோறும் பெண்களுக்கான விடுதிகள் அமைக்கப்படும்.
-
ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் பயோ பார்மா சக்தி திட்டம் செயல்படுத்தப்படும்.
-
இந்தியாவில் டேட்டா சென்டர்கள் அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2047 ஆம் ஆண்டு வரை வரி சலுகை வழங்கப்படும்.
-
காலணிகள் ஏற்றுமதிக்கான மூலப்பொருட்களை வரியில்லாமல் இறக்குமதி செய்ய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
நகராட்சி பத்திரங்கள் வெளியிட்டு நிதி திரட்ட ரூ.100 கோடி மதிப்பில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கித் துறையை சீர்திருத்தி அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.
-
மருத்துவத் துறையில் இளைஞர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வரும் ஆண்டுகளில் 1.5 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
