நாகர்கோவில்: அ.தி.மு.க. மற்றும் பா.ஜ. கூட்டணியை கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், “பூஜ்யம் பூஜ்யத்துடன் சேர்ந்தால் ராஜ்யம் கிடைக்காது” எனக் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருவது தேர்தல் சூழ்நிலையை மாற்றாது என்றார். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இந்த தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கும் என்றும், வளர்ச்சி உள்ள மாநிலத்தில் பா.ஜ. நிலைபெறாது எனவும் தெரிவித்தார்.
மற்ற மாநிலங்களில் நிலவும் சமூக மற்றும் அரசியல் சூழ்நிலைகளை எடுத்துக்காட்டிய அவர், தமிழகத்தில் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்படுகிறது என்றார்.
அ.தி.மு.க. மற்றும் பா.ஜ. ஒருவரை ஒருவர் நம்பி நிற்கும் நிலைமை குறித்து விமர்சித்த அவர், அந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது எனக் குறிப்பிட்டார்.
