புதுடில்லி: கடந்த 2016 முதல் 2025 வரை பணியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிராக 8,639 புகார்கள் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக லோக்சபாவில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது: 2016 முதல் 2025 வரை பணியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிராக 8,639 புகார்கள் வந்துள்ளன. இதில் அதிகபட்சமாக 2024ஆம் ஆண்டு 1,170 புகார்கள் தலைமை நீதிபதி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. ஐகோர்ட் நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை நீதித்துறை கையாள்கிறது.
நீதிமன்ற நடைமுறைகளின்படி, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மற்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கு எதிரான புகார்கள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் வழங்கப்பட வேண்டும். அதேபோல், ஐகோர்ட் நீதிபதிகளுக்கு எதிரான புகார்கள் சம்பந்தப்பட்ட ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் வழங்கலாம்.
