புதுடில்லி: ராகுல் நெகட்டிவ் அரசியலின் பிரதிநிதியாக செயல்படுகிறார் என்றும், இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் தொடர்பில் இருந்து நாட்டின் நலன்களை பாதிக்கிறார் என்றும் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் குற்றம்சாட்டினார்.
டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காந்தி குடும்பம் நீண்டகாலமாக சமரச அரசியலை பின்பற்றி வருகிறது என்றார். நேரு காலம் தொடங்கி இன்றுவரை வெளிநாட்டு சக்திகளின் தாக்கத்தில் செயல்பட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
ராகுல் வெளிநாட்டு பயணங்களில் பாதுகாப்பு விதிகளை மீறுவதாகவும், இந்தியாவுக்கு எதிரான நபர்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார். எல்லைப் பகுதிகளுக்குச் செல்லும் போது கூட நாட்டின் நலனுக்கு விரோதமானவர்களுடன் தொடர்பு விரிவுபடுத்துவதாக கூறினார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட அதிகாரம் பயன்படுத்தப்பட்டதாகவும், தேசிய ஆலோசனைக் குழு மூலம் நிர்வாகம் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
