புதுடில்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டின்போது நடந்த போராட்டம் தொடர்பாக, இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய்பானு சிப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டில்லி பாரத் மண்டபத்தில் சில நாட்களுக்கு முன்பு ஏஐ உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் நுழைந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா – அமெரிக்க ஒப்பந்தம் குறித்து எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய ஆடைகளை அவர்கள் அணிந்திருந்தனர்.
போராட்டம் தொடங்கிய சில வினாடிகளில், அணிந்திருந்த சட்டைகளை களைந்து எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து சம்பவ இடத்திலேயே போலீசார் தலையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அங்கிருந்து அகற்றினர்.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் செயலுக்கு பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் எழுந்தது. போராட்டத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
