ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது லோக்சபாவில் மூன்று நாட்கள் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி உரையுடன் பார்லிமென்ட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற லோக்சபா அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில், ஜனாதிபதி உரை தொடர்பான விவாதம் பிப்ரவரி 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது. மொத்தம் 18 மணி நேரம் நடைபெறும் இந்த விவாதத்தின் முடிவில், பிப்ரவரி 4ம் தேதி பிரதமர் மோடி பதிலளித்து பேச உள்ளார்.
2026–27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான விவாதம் பிப்ரவரி 5, 9, 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் நடைபெறும். இந்த பட்ஜெட் விவாதமும் மொத்தம் 18 மணி நேரம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 11ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவாதங்களுக்கு பதிலளிப்பார் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
