சென்னை: சென்னையில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் இரண்டு வயது குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், கடந்த நான்கு நாட்களாக தேடப்பட்டு வந்த பெண்ணின் உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கவுரவ் குமார் (24), அவரது மனைவி முனிதா குமாரி (22) மற்றும் அவர்களது குழந்தை ஆகியோர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவர் கண்முன்னே மனைவியை கொலை செய்து, பின்னர் இரண்டு வயது குழந்தையை சுவரில் அடித்து கொன்றுவிட்டு, உடல்களை குப்பை தொட்டி மற்றும் கூவம் பகுதிகளில் வீசியதாக விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் ஐந்து தனிப்படைகள் அமைத்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, நான்கு நாட்களுக்குப் பிறகு முனிதா குமாரியின் உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில் இருந்து மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக அடையாறு, தரமணி பகுதிகளில் பதுங்கியிருந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் (33), நரேந்திரகுமார் (45), ரவீந்திரநாத் தாகூர் (45), பிஹாஷ் (24) உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
