புதுடில்லி: சபாநாயகர் Om Birla குறித்து காங்கிரஸ் எம்பிக்கள் முறைகேடாக நடந்துகொண்டதாக கூறப்படும் சம்பவத்திற்கான வீடியோ ஆதாரத்தை மத்திய அமைச்சர் Kiren Rijiju வெளியிட்டுள்ளார்.
லோக்சபாவில் முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி Rahul Gandhi பேச அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்த கிரண் ரிஜிஜூ, காங்கிரஸ் எம்பிக்களின் நடத்தை குறித்து குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இன்று சுமார் 9 நொடிகள் ஓடும் வீடியோவை வெளியிட்டு அவர் கூறியதாவது: காங்கிரஸ் எம்பிக்கள் 20–25 பேர் சபாநாயகரை அவரது அறையில் சூழ்ந்து கொண்டு கடுமையாக பேசியதுடன், பிரதமருக்கு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். விவாதம் மற்றும் ஆலோசனையில் நம்பிக்கை உள்ளது; மிரட்டலில் நம்பிக்கை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சபாநாயகர் இருக்கையை எதிர்க்கட்சி எம்பிக்கள் சூழ்ந்து கொண்டு ஆக்ரோஷமாக பேசுவதும், மறுபுறம் கிரண் ரிஜிஜூ தலைமையில் பாஜ எம்பிக்கள் அமைதியாக இருப்பதும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
