பல்லியா: உத்திரப்பிரதேச மாநிலம் பல்லியாவில், மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஒரு பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிக்கந்தர்பூர் நகரின் ஜல்பா சவுக்கைச் சேர்ந்த கவுதம் கவுர் அளித்த புகாரின் பேரில், பாட்னாவின் புதிய பாடலிபுத்ரா காலனியைச் சேர்ந்த ஜோஸ் தாமஸ் (47) மீது மாநில சட்டவிரோத மதமாற்றத் தடைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: ஜோஸ் தாமஸ், பணம், வேலைவாய்ப்பு அல்லது நோய்களை குணப்படுத்துவதாக கூறி, சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
