கராச்சி: ஈரான் ஆட்சியாளர் கமேனி உயிரிழந்ததை கண்டித்து பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுப்படுத்த முயன்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், தூதரக வளாகம் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு பதற்றம் நிலவியது.
இதற்கிடையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஸ்கர்து பகுதியில் செயல்படும் ஐநா அலுவலகம், ராணுவ பள்ளி மற்றும் காவல் அலுவலகம் மீது போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு முன்னெச்சரிக்கையாக ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையிலும் அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட்டு சில அமைப்புகள் போராட்டம் நடத்தியன. அங்கு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர்.
