டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரான் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹமதிநஜாத் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் மதத் தலைவரும் ஆட்சியாளருமான கமேனியை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் உயிரிழந்ததாக முன்பே அறிவிக்கப்பட்டது. இந்த தாக்குதல் குறித்து ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, டெஹ்ரானின் நர்மாக் பகுதியில் அமைந்திருந்த கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், அங்கு வசித்து வந்த முன்னாள் அதிபர் அஹமதிநஜாத் பலியானதாக கூறப்படுகிறது. அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
