சென்னை: தமிழகம் முழுவதும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்கள், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர். சிறப்பு திருத்த பணிகளுக்குப் பிறகு, மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.67 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தலைமை தேர்தல் கமிஷன் கடந்த ஆண்டு துவக்கியது. நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை எஸ்.ஐ.ஆர். சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்டது.
அக்டோபர் 2025 நிலவரப்படி 6.41 கோடியாக இருந்த வாக்காளர்களில், 97.30 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். பின்னர், பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்த மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன.
அவற்றின் அடிப்படையில், இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மாநில வாக்காளர் விவரங்களை அறிவித்தார்:
ஆண் வாக்காளர்கள் – 2,66,63,233
பெண் வாக்காளர்கள் – 2,77,06,332
மூன்றாம் பாலினத்தவர் – 7,617
எஸ்.ஐ.ஆர். வரைவு பட்டியலில் நீக்கப்பட்டவர்களுக்கு அடுத்ததாக, இறுதி நடைமுறைக்குப் பிறகு கூடுதல் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் 11.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட வாரியான முக்கிய விவரங்கள்:
நாமக்கல் – மொத்தம் 13,10,951 வாக்காளர்கள்
தூத்துக்குடி – 13,76,624 வாக்காளர்கள்
விருதுநகர் – 14,97,417 வாக்காளர்கள்
சிவகங்கை – 11,10,599 வாக்காளர்கள்
சேலம் – 27,55,830 வாக்காளர்கள்
திருச்சி – 21,26,303 வாக்காளர்கள்
கடலூர் – 20,15,196 வாக்காளர்கள்
செங்கல்பட்டு – 22,60,036 வாக்காளர்கள்
கன்னியாகுமரி – 15,10,550 வாக்காளர்கள்
மயிலாடுதுறை – 7,29,216 வாக்காளர்கள்
கோவை – 26,96,813 வாக்காளர்கள்
இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தளங்களில் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
