சென்னை: கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுக மீது கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
அவரது அறிக்கையில், 1998ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்ததும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததும் இன்னும் மறக்க முடியாத வேதனையாக உள்ளதாக குறிப்பிட்டார்.
பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருக்க வேண்டிய கோவை மாநகரம், பிரிவினைவாத சக்திகளாலும், தேர்தல் அரசியலாலும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை தண்டனைக் காலத்திற்கு முன்பே விடுவித்தது திமுக என குற்றம்சாட்டினார். சமீபத்தில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த சம்பவம் குறித்தும் அவர் விமர்சனம் தெரிவித்தார்.
தேர்தல் வாக்குகளுக்காக பொதுமக்கள் பாதுகாப்பு புறக்கணிக்கப்படுவதாகவும், அப்பாவி மக்களின் உயிரிழப்பை நினைவுகூர்ந்து அரசியல் மாற்றம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
