சென்னை: மகளிர் உரிமைத்தொகை மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கருத்துகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
அவரது அறிக்கையில், திராவிட மாடல் அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் முதலில் விமர்சனங்களுக்கு உள்ளானது என்றும், பின்னர் அதையே சிலர் உரிமை கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட விவகாரத்தில், இது எதிர்க்கட்சியின் அழுத்தத்தால் அல்ல என அவர் விளக்கமளித்தார். தேர்தலை காரணம் காட்டி திட்டத்தை தடுக்க முயற்சிகள் நடந்ததாகவும், அந்த சூழ்நிலையை முன்னிட்டு முன்கூட்டியே பணம் வரவு வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அரசின் மகளிர் நலத் திட்டங்கள் வீடு தோறும் எடுத்துக்கூறப்படுவதாகவும், மாநிலம் முழுவதும் கட்சியின் மகளிர் அணியினர் களமிறங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், அரசின் மகளிர் நலக் கொள்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
