சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: லட்சக்கணக்கில் பணம் சிக்கியது
சென்னை: தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவ்வப்போது சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை நடைபெற்ற சோதனைகளில் லஞ்சம் பெற்றதாகப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் பெறக்கூடாது என்றும் மாநில அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னையில் உள்ள பல சார்பதிவாளர் அலுவலகங்கள், கோவை மாவட்டத்தின் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் வடவள்ளி, திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி ஆகிய இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
இந்தச் சோதனையின்போது, கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பணம் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
