ஒரே நாளில் கோரிக்கைக்கு பலன்: மாற்றுத்திறனாளி தினேஷுக்கு பணி நியமன ஆணை!
சென்னை: வேலைவாய்ப்பு கோரி முதல்வர் விஜயிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி தினேஷுக்கு, அடுத்த நாளே பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய (ஐடிஐ) வளாகத்தில் புதிய திறன் பயிற்சி ஆய்வகங்களை முதல்வர் விஜய் அக்டோபர் 28ஆம் தேதி திறந்து வைத்தார். தொடர்ந்து, அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த மாணவர்களின் படைப்புகளைப் பார்வையிட்டு, அவர்களின் திறமைகளைப் பாராட்டினார். மாணவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
அப்போது, மாற்றுத்திறனாளியான தினேஷ், வேலைவாய்ப்பு வழங்கக் கோரி முதல்வர் விஜயிடம் கோரிக்கை மனு அளித்தார்.
இந்த மனுவைப் பரிசீலித்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 29ஆம் தேதி தினேஷுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக, திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்.
ஒரு சாமானிய மாற்றுத்திறனாளியின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து, அவரது வாழ்க்கையில் நம்பிக்கையை முதல்வர் விஜய் ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
வேலைவாய்ப்பு கோரி மனு அளித்த மறுநாளே தினேஷுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
