அக். 28க்குள் நாட்டை விட்டு வெளியேற நடிகர் இம்ரான் கானுக்கு நோட்டீஸ்
மும்பை: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த முயன்ற கரப்பான்பூச்சி அமைப்பினரை போலீசார் கைது செய்த நிலையில், மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதாகக் கூறப்படும் ஹிந்தி நடிகர் இம்ரான் கானுக்கும் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட்டம் நடத்த முயன்ற கரப்பான்பூச்சி அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், மும்பை கிராந்தி மைதானத்தில் நடைபெறவிருந்த போராட்டத்தின்போது நடிகர் இம்ரான் கானும் கைது செய்யப்பட்டதாகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் வாகனத்தில் அவர் அமர வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் இம்ரான் கானை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு மும்பை போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருப்பதால், இந்தியக் குடிமகன் அல்லாதவராகக் கருதப்படுகிறார்.
குடியேற்றச் சட்ட விதிகளின்படி, வெளிநாட்டவர்கள் இந்தியாவில் நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்கக் கட்டுப்பாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், வரும் அக்டோபர் 28-ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு நடிகர் இம்ரான் கானுக்கு மும்பை போலீசார் காலக்கெடு விதித்துள்ளதாகச் செய்தி தெரிவிக்கிறது.
