மாணவளிர்கன் நலன் மற்றும் அவர்களின் எதிர்காலமே அரசின் மிக முக்கிய முன்னுரிமை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், நீட் தேர்வு உள்ளிட்ட வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு உட்பட அனைத்து வினாத்தாள் கசிவு வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தி, குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் நலனை பாதுகாக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
மேலும், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எந்த நபரையும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க விடமாட்டோம் என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் உறுதியளித்துள்ளார்.
