தமிழ்நாட்டில் மூன்று மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழக (Deemed University) அந்தஸ்து பெற்றிருப்பதால், இந்தக் கல்வியாண்டிலேயே 650 மருத்துவக் கல்வி இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலிருந்து விலகியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம், சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று கல்வி நிறுவனங்கள் தற்போது நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாற்றத்தால், மாநில ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்புகள் குறையும் என்றும், குறிப்பாக 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கல்லூரிகளில் மருத்துவக் கல்விக்கான கட்டணம் குறைந்தபட்சம் நான்கு மடங்கு வரை உயரக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த மூன்று கல்லூரிகளுக்கும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்
மேலும், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்கள் தொடர்பாக, முந்தைய அரசு 60 நாள் காலக்கெடுவுக்குள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.லாச் சான்றிதழ் (NOC) வழங்கவில்லை என்று பல்கலைக்கழகம் தெளிவுபடுத்தியிருப்பதாகவும், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, அலட்சியம் அல்லது தவறான நடவடிக்கைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மருத்துவக் கல்வி குறைந்த கட்டணத்தில் கிடைக்க வேண்டும் என்ற மாணவர்களின் கனவு பாதிக்கப்படக் கூடாது என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
