Narendra Modi, மத்திய அமைச்சர் Ram Mohan Naiduவின் குழந்தைகளுடன் அன்பாக விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Telugu Desam Partyயைச் சேர்ந்த ராம் மோகன் நாயுடு, நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் மோடியை குடும்பத்துடன் சந்தித்தது மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது,” என்று ராம் மோகன் நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அவரது அன்பும் வசீகரமான நடையும் எங்கள் குடும்பத்தின் மூன்று தலைமுறையினரையும் கவர்ந்தது. அவர் ஏன் மக்களின் இணையற்ற தலைவராக திகழ்கிறார் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு,” என்றும் தெரிவித்துள்ளார்.
அவரது தாயார் பிரதமருக்கு மரக்கன்றை பரிசளித்த தருணம் மிகவும் சிறப்பானதாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், பிரதமர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் விளையாடிய புகைப்படங்களை Instagram பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “இரண்டு இளம் நண்பர்கள் பிரதமர் அலுவலகத்தில் என்னை சந்தித்தனர்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், பிரதமர் மோடியின் அன்பான அணுகுமுறையை பலரும் பாராட்டி கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
