செவிலியர் மாணவி உயிரிழப்பு: திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல்
Pudukkottai district மாவட்டம், குளத்தூர் வட்டத்திற்குட்பட்ட மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்களான சேட்டு – கலைச்செல்வி தம்பதியரின் மகள் Seethalakshmi (20), Tiruchirappalli Government Hospitalயில் மூன்றாம் ஆண்டு செவிலியர் படிப்பு பயின்று வந்தார்.
சீதாலட்சுமிக்கு மூக்கில் சதை வளர்ந்திருந்ததால், அதற்கான சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்ததைத் தொடர்ந்து, நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது அதிக அளவில் மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மருத்துவரின் தவறான சிகிச்சையால்தான் மாணவி உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, அவரது உறவினர்கள் மற்றும் சக மாணவிகள் மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவமனை முதல்வர் நேரில் வந்து பேச வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
சம்பவ இடத்திற்கு போலீசார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் K. G. Arunraj, “செவிலியர் மாணவி உயிரிழந்த சம்பவத்தின் உண்மையை கண்டறிய நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழு திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளோம்.
இந்த விவகாரத்தில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. மாணவர்கள் அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
