இஸ்லாமாபாத்: புல்வாமா பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கூறப்படும் ஹம்சா பர்ஹான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புல்வாமா தாக்குதலுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதியான ஹம்சா பர்ஹான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் பகுதியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்கள் அவனை வழிமறித்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் அவனது உடலில் பல குண்டுகள் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது குறித்தோ, கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்தோ இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
புல்வாமா தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத நடவடிக்கைகளை திட்டமிட்டவர்களில் ஹம்சா பர்ஹான் முக்கிய நபராக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
