‘ஜிம் ஜிஹாத்’ வழக்கில் 10 பேர் மீது குண்டர் சட்டம்
மிர்சாபூர்: பெண்களை மிரட்டி கட்டாய மதமாற்றம் செய்ததாக கூறப்படும் ‘ஜிம் ஜிஹாத்’ வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
Uttar Pradesh மாநிலத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி தேஹத் காவல் நிலையத்தில், கடந்த ஜனவரி 19ஆம் தேதி சட்டவிரோத மதமாற்றத் தடைக் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் விசாரணை விரிவுபடுத்தப்பட்ட நிலையில், கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டு, குற்றவாளிகள் மீது சுமார் 6,000 பக்க குற்றப்பத்திரிகை கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
போலீசார் கூறுகையில், உடற்பயிற்சி கூடங்களை நடத்தி வந்த சிலர், அங்கு வரும் ஹிந்து பெண்களை குறிவைத்து நட்பாக பழகியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
‘ஜிம் ஜிஹாத்’ என குறிப்பிடப்படும் இந்த நடவடிக்கையின் மூலம், பெண்களுடன் நெருக்கமாக பழகி, பின்னர் அந்த காட்சிகளை பதிவு செய்து மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், சில பெண்களை கட்டாய மதமாற்றம் செய்ததுடன், புர்கா அணிய வைத்ததும், மதம் சார்ந்த வசனங்களை ஓதச் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் Imran Khan மற்றும் மவுலானா கலிலுதின் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்து மிர்சாபூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அந்த 10 பேரின் மீதும் தற்போது குண்டர் சட்டம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
