சான் டியாகோ: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பிரபல மசூதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
San Diego நகரில் உள்ள மசூதியில் துப்பாக்கிச்சூடு நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு மேற்கொண்ட விசாரணையில், மசூதியின் காவலாளி உள்ளிட்ட 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த தாக்குதலை நடத்திய இரு வாலிபர்களும் பின்னர் துப்பாக்கியால் தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், மெக்சிகோ எல்லைக்கு அருகில் அமைந்துள்ள அந்த பெரிய மசூதியின் நிர்வாகத்தில் செயல்படும் பள்ளியில் பயிலும் அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதுகுறித்து San Diego Police Department அதிகாரிகள் கூறுகையில், “ஒரு பெண் தனது மகனை காணவில்லை என்றும், தனது கார் மற்றும் ஆயுதங்களும் மாயமாகியுள்ளதாகவும் புகார் அளித்திருந்தார். அதற்குப் பிறகே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது,” என்றனர்.
மேலும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் அந்த பெண்ணின் மகன் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
