துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அபுதாபியில் அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையாத் அல் நயானை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 5 நாடுகளுக்கான அரசு முறை பயணத்தை மேற்கொண்ட பிரதமர் மோடி, இன்று (மே 15) டெல்லியில் இருந்து புறப்பட்டு அபுதாபி சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற சந்திப்பில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதன் போது எண்ணெய் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையாத் அல் நயான் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அன்பான வரவேற்புக்கு தனது மனமார்ந்த நன்றியை பிரதமர் மோடி தெரிவித்தார்.
