16 மாநிலங்களில் 3ம் கட்ட எஸ்ஐஆர் பணிகள் தொடக்கம்; தேர்தல் கமிஷன் அறிவிப்பு
புதுடில்லி: தேர்தல்களில் முறைகேடுகளை தடுக்கும் நடவடிக்கையாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேலும் விரிவுபடுத்தியுள்ள Election Commission of India, 3ம் கட்டமாக மேலும் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள காலமானவர்கள், நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் மற்றும் இரு இடங்களில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களை கண்டறிந்து நீக்குவதற்காக தேர்தல் கமிஷன் இந்த சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
எஸ்ஐஆர் எனப்படும் இந்த சிறப்பு திருத்தப்பணிகள் ஏற்கனவே தமிழகம் மற்றும் West Bengal உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டிருந்தன. தற்போது 3ம் கட்டமாக மேலும் பல மாநிலங்களில் இந்த பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த 3ம் கட்ட பணிகள் நடைபெற உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வருமாறு:
- Andhra Pradesh
- Arunachal Pradesh
- Chandigarh
- Dadra and Nagar Haveli and Daman and Diu
- Haryana
- Jharkhand
- Karnataka
- Maharashtra
- Manipur
- Meghalaya
- Mizoram
- Nagaland
- Delhi
- Odisha
- Punjab
- Sikkim
- Tripura
- Telangana
- Uttarakhand
இந்த 3ம் கட்ட எஸ்ஐஆர் பணிகளில் அரசியல் கட்சிகளை சேர்ந்த 3.42 லட்சம் ஓட்டுச்சாவடி நிலை முகவர்களின் உதவியுடன், 3.94 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். அவர்கள் 36.73 கோடி வாக்காளர்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து விவரங்களை சரிபார்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் மே 30ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 14ஆம் தேதி வரை நடைபெறும். மேலும், வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை 5 முதல் அக்டோபர் 21ஆம் தேதி வரை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற எஸ்ஐஆர் பணிகளில், 5.18 கோடி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
