முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக Ricky Ratan Pandit Vetrivel நியமிக்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு முன்பு, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் என்றும், 140 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் ரிக்கி ரதன் பண்டிட் கணித்திருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே, அவர் முதல்வர் Vijay வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அவர் கூறிய கணிப்பைப் போலவே தவெக ஆட்சியை அமைத்ததைத் தொடர்ந்து, ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேல் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
ஆனால், இந்த நியமனத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததாக கூறிய சில கட்சிகளும் அதிருப்தியை வெளிப்படுத்தின.
இந்த விவகாரம் தேசிய மற்றும் மாநில அளவிலான ஊடகங்களில் பரவலாக பேசப்பட்ட நிலையில், சட்டசபையிலும் இந்த நியமனம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக Premalatha Vijayakanth உள்ளிட்ட சிலர் இந்த விவகாரத்தை சட்டசபையில் குறிப்பிட்டனர்.
இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், “இந்த விவகாரம் குறித்து மீண்டும் யோசிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, சட்டசபை நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்ற உடனேயே, அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரதன் பண்டிட் நியமிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
யார் இந்த ரிக்கி ரதன் பண்டிட்?
- ஜோதிடம் மற்றும் எண் கணிதத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.
- ஆரம்பத்தில் “பண்டிட் வெற்றிவேல்” என அறியப்பட்ட இவர், 2008ஆம் ஆண்டு டெல்லிக்கு குடிபெயர்ந்த பிறகு தனது பெயரை “ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேல்” என மாற்றிக் கொண்டார்.
- முன்னாள் முதல்வர் J. Jayalalithaa அவர்களுக்கும் சில சமயங்களில் ஜோதிடம் பார்த்ததாக கூறப்படுகிறது.
