சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் பனைமரம் ஏறி பதநீர் இறக்கும் தொழிலாளி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் Edappadi K. Palaniswami கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட மருதம்புத்தூர் பகுதியில் மணிகண்டன் என்ற தொழிலாளி பனைமரத்தில் பதநீர் இறக்கும் போது, கள் இறக்கியதாக கூறி போலீசார் சந்தேகித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆலங்குளம் போலீஸ் எஸ்ஐ துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் இரண்டு குண்டுகள் தாக்கி மணிகண்டன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும், பனைத்தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
