சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நிர்வாக மாற்றங்களை மேற்கொண்டுள்ள Election Commission of India, மாநில தலைமை செயலர் முருகானந்தத்தை மாற்ற உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தலை நியாயமாக நடத்துவதற்காக, நீண்ட காலமாக ஒரே பதவியில் இருந்த அதிகாரிகள் மற்றும் புகாருக்குள்ளான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, தமிழக தலைமை செயலராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு, அவரது பதவிக்கு சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட் தேவாசிர்வாதமும் மாற்றப்பட்டுள்ளார். அந்த பொறுப்புக்கு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பே, தமிழக டிஜிபியாக Sandeep Rai Rathore நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
