வாஷிங்டன்: Iran மற்றும் United States இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் Donald Trump ஈரானுக்கு இறுதி கெடு விதித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிப்ரவரி 28 அன்று தொடங்கிய மோதலின் போது ஈரான் வலிமையாக இருந்தாலும், தற்போது அந்த வலிமை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஈரான் அரசின் நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு மக்களே தங்கள் அரசிலிருந்து விடுதலை பெற விரும்புகிறார்கள் என தகவல்கள் கிடைக்கின்றன என்றும் கூறினார்.
இந்த மோதல் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறிய அவர், ஈரான் தரப்பில் 7 நாட்கள் அவகாசம் கேட்ட நிலையில், அமெரிக்கா 10 நாட்கள் அவகாசம் வழங்கியதாக தெரிவித்தார்.
அந்த காலக்கெடு செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி (அமெரிக்க நேரம்) வரை நீடிக்கும் என்றும், அதற்குள் உடன்பாடு ஏற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இல்லையெனில், ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் கடுமையாக தாக்கப்படும் என்றும், பாலங்கள், மின்நிலையங்கள் உள்ளிட்டவை அழிக்கப்படும் என்றும் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
