New York: Donald Trump இயேசுவுடன் தன்னை ஒப்பிட்டு பேசியிருப்பது அமெரிக்காவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கத்தோலிக்க கிறிஸ்துவ மதத் தலைவர் போப் பதவிக்குத் தகுதி உண்டு என டிரம்ப் கூறியிருந்தார். அதேபோல், ஈரானின் ஷியா முஸ்லிம் மதத் தலைவர் பதவியும் தன்னைத் தேடி வந்ததாகவும், அதை தானே நிராகரித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற Easter விழாவில் பேசிய டிரம்ப், “குருத்தோலை ஞாயிறன்று இயேசு ஜெருசலேமுக்கு வந்தபோது மக்கள் அவரை ராஜாவாக கொண்டாடினர். தற்போது என்னையும் மக்கள் ராஜாவாக அழைக்கிறார்கள்” என சிரித்தபடி கூறினார்.
மேலும், “நான் ராஜாவாக இருந்தால் இன்னும் பல செயல்களை செய்ய முடியும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தை ஆதரிப்பது போல, வெள்ளை மாளிகையின் ஆன்மிக ஆலோசகரான Paula White-Cain, “இயேசு போலவே டிரம்பும் பல பாடங்களை கற்பிக்கிறார்” எனக் கூறினார்.
சமீபத்தில் “No Kings” என்ற தலைப்பில் அமெரிக்காவில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், டிரம்பின் இந்த பேச்சு வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்வின் வீடியோ வெள்ளை மாளிகை இணையதளத்தில் வெளியிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்டாலும், அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
டிரம்பின் இந்த கருத்து கிறிஸ்தவ சமூகத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் இதை மத அவமதிப்பாகக் கருதி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
