நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில், புதிய பிரதமராக பதவியேற்றுள்ள Balen Shah, இந்திய பிரதமர் Narendra Modi அனுப்பிய வாழ்த்து செய்திக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான Nepal-இல் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாணவர் போராட்டம் காரணமாக, அப்போது பிரதமராக இருந்த K. P. Sharma Oli தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்ய பொதுத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில், ராப் பாடகராகவும், காத்மாண்டு முன்னாள் மேயராகவும் இருந்த பாலேந்திர ஷா தலைமையிலான ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி (RSP) வெற்றி பெற்றது. தொடர்ந்து அவர் நேற்று பிரதமராக பதவியேற்றார்.
பதவியேற்றதை தொடர்ந்து, பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த பாலேந்திர ஷா, தனது சமூக வலைதள பதிவில், வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், இரு நாடுகளின் மக்களின் வளர்ச்சிக்காகவும், இந்தியா–நேபாள உறவை மேலும் வலுப்படுத்தவும், மோடியுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
