சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, சட்டசபை தேர்தலை முன்னிட்டு தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பாமகவுக்கு சேலம் (மேற்கு), தர்மபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில் (தனி), கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் (வடக்கு), அம்பத்தூர் ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனுடன் Anbumani Ramadossக்கு ராஜ்யசபா இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று (மார்ச் 30) 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அன்புமணி வெளியிட்டார். அதன் விவரம்:
பெரம்பூர் – திலகபாமா
தர்மபுரி – சவுமியா அன்புமணி
விருத்தாசலம் – தமிழரசி ஆதிமூலம்
சேலம் (மேற்கு) – மு. கார்த்தி
பென்னாகரம் – செல்வம்
போளூர் – பாஸ்கரன்
திருப்போரூர் – கே. பாலு
ஜெயங்கொண்டம் – வைத்தி
சேலம் (வடக்கு) – சதாசிவம்
விக்கிரவாண்டி – சிவக்குமார்
சோளிங்கர் – சரவணன்
மயிலாடுதுறை – சித்தமல்லி ஏ. பழனிச்சாமி
உத்திரமேரூர் – மகேஷ் குமார்
ரிஷிவந்தியம் – செழியன்
காட்டுமன்னார்கோவில் – அன்பு சோழன்
இதற்கு முன்பு மார்ச் 25ம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில் கீழ்வேளூர் – ச. வடிவேல் ராவணன், அம்பத்தூர் – என். சேகர், செஞ்சி – அ. கணேஷ் குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
