புதுடில்லி: Iran மீது United States மற்றும் Israel இணைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த சூழலில், Kashmir பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் மனிதாபிமான அடிப்படையில் ஈரான் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்தனர். அவர்கள் தங்களது தனிப்பட்ட நகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ரொக்கம், உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட உதவிகளை சேகரித்து அனுப்பினர்.
இந்த உதவியை பாராட்டி, இந்தியாவுக்கான ஈரான் துாதரகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் பதிவிட்டது. அந்த பதிவில், “இக்கட்டான சூழலில் ஈரான் மக்களுக்கு உதவிய காஷ்மீர் மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த அன்பையும் உதவியையும் என்றும் மறக்க மாட்டோம். இதற்காக இந்தியாவுக்கு நன்றி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்த பதிவுகள் பின்னர் திடீரென நீக்கப்பட்டன. இதற்கு பின்னால் Pakistan நாட்டை சேர்ந்த சமூக வலைதள பயனாளர்களின் எதிர்ப்பு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக, காஷ்மீரை இந்தியாவின் பகுதியாக குறிப்பிடப்பட்டதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், Pakistan அரசு தரப்பிலிருந்தும் ஈரானுக்கு அழுத்தம் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அந்த பதிவுகள் நீக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
