புதுடில்லி: மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தால் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும், எரிபொருள் விநியோகத்தில் கவலைப்பட தேவையில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Iran மீது United States மற்றும் Israel இணைந்து பிப்ரவரி 28 முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருவதால் மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்ததால், எதிர்க்கட்சிகள் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த கோரிக்கை விடுத்திருந்தன. இதையடுத்து டில்லியில் மத்திய அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் Rajnath Singh தலைமை வகித்தார். இதில் மத்திய உள்துறை அமைச்சர் Amit Shah, வெளியுறவு அமைச்சர் S. Jaishankar, நிதி அமைச்சர் Nirmala Sitharaman உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், காங்கிரஸ் தேசிய தலைவர் Mallikarjun Kharge உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் Rahul Gandhi கேரளாவில் இருந்ததால் பங்கேற்கவில்லை. திரிணமுல் காங்கிரஸ் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில், மேற்காசிய பதற்றத்தால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலை குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்தது. “நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு பாதிக்கப்படவில்லை. பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு போதுமான அளவில் இருப்பில் உள்ளன. மேலும் பல எரிபொருள் கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன” என அரசு தெரிவித்தது.
ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து தடை குறித்து எழுந்த அச்சத்திற்கிடையில், அத்தியாவசிய எரிபொருட்களுடன் கப்பல்கள் தொடர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
மோதல் தீவிரமடைந்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் எரிபொருள் இருப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் Hardeep Singh Puri, “நாட்டின் சமையல் எரிவாயு தேவையின் 60 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை இறக்குமதி மற்றும் திட்டமிடப்பட்ட விநியோகம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது” என தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. கூட்டத்தின் வடிவம் குறித்து ஆட்சேபனை தெரிவித்த கார்கே, பார்லிமென்டில் விவாதம் அவசியம் என வலியுறுத்தினார்.
மேலும், பிரதமர் மோடியின் சமீபத்திய இஸ்ரேல் பயணம் மற்றும் கொரோனா காலம் குறித்த அவரது கருத்துகள் பொதுமக்களில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின.
