அமராவதி: 13 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமியர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு அடுத்த 90 நாட்களுக்குள் தடை விதிக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டசபையில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு அடுத்த 90 நாட்களுக்குள் தடை அமல்படுத்தப்படும். மேலும் 13 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இந்தத் தடையை நீட்டிக்கலாமா என்பது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த முடியாத வகையில் உறுதி செய்யப்படும். இந்த திட்டம் தற்போது பரிசீலனையில் உள்ளது.
ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் மேலும் முடிவுகள் எடுக்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
கர்நாடகாவிலும்…!
ஏற்கனவே 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. பட்ஜெட் உரையில் முதல்வர் சித்தராமையா இதை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த செய்தி தினமலர் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
