வாஷிங்டன்: ஈரான் பேச்சுவார்த்தை நடத்த விரும்பியதாகவும், ஆனால் அதற்கான நேரம் கடந்துவிட்டதாக கூறிவிட்டேன் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் கடந்த பிப்ரவரி 28 முதல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல் தற்போது நான்காவது நாளை எட்டியுள்ளது.
இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் மேற்காசியாவில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானின் வான் பாதுகாப்பு படை, விமானப்படை மற்றும் கடற்படை உள்ளிட்ட முக்கிய ராணுவ தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் பின்னர் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினர். ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டதாக நான் தெரிவித்துவிட்டேன் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஆனால் ஈரான் தரப்பில் இருந்து எப்போது பேச்சுவார்த்தை கோரப்பட்டது, யார் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர் என்பதற்கான விவரங்களை டிரம்ப் வெளியிடவில்லை.
