சென்னை: நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி, அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
லண்டனைச் சேர்ந்த தொழில் அதிபரின் மகளான சங்கீதா மற்றும் விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 1998 ஜூலை 10ஆம் தேதி லண்டனில் நிச்சயதார்த்தமும் பதிவு திருமணமும் நடைபெற்றது. அதன் பின்னர் 1999 ஆகஸ்ட் மாதம் சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தங்களது திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் ரத்து செய்ய வேண்டும் என சங்கீதா மனுவில் கோரியுள்ளார்.
வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
