புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். டில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ராகுல் 247 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாகவும், அங்கு இந்தியாவை விமர்சித்து பேசியதாகவும் கூறினார்.
மேலும், நாட்டுக்கு எதிரான சக்திகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம்சாட்டிய அவர், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சி காலங்களில் அரசியல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாகவும் விமர்சனம் செய்தார். மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட அதிகாரம் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ராகுல் வெளிநாட்டு சக்திகளின் பாதிப்பில் செயல்படுகிறார் என்றும், பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் கூறினார். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தொடர்புடைய நபர்களுடன் சமரசம் செய்வதாகவும் அவர் விமர்சித்தார்.
பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது; அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
