சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக விரைவில் தி.மு.க. தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். எத்தனை இடங்கள், எந்தெந்த தொகுதிகள் என்பது காங்கிரஸ் தலைமை விருப்பப்படி அமையும் என்றும் கூறினார்.
மேலும், கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என உறுதி அளித்த அவர், மத்திய அரசு ஏஜன்சிகள் வாயிலாக இதற்கு முன் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.
தற்போது தி.மு.க. அமைச்சர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளையும், அந்தந்த அமைச்சர்கள் சட்டரீதியாக எதிர்கொள்வர் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருப்போர் இனிமேல் கூட்டணி குறித்து முரண்பாடான கருத்துகளை வெளியிட மாட்டார்கள் என கூறிய அவர், ஹிந்தி படித்தோர் குறித்து முன்வைக்கப்பட்ட கருத்துகளும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.
