சென்னை நங்கநல்லூரில், ‘தமிழகம் தலைகுனியாது’ என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பரசன், வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருவதாகவும், போதைப்பொருள் தொடர்பான பிரச்னைகள் குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டார். கடந்த ஆட்சிக்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இத்தகைய நிலை உருவாகியிருக்காது என்றும் குறிப்பிட்டார். மேலும், போதைப்பொருளை ஒழிப்பதில் தற்போதைய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்றார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய திமுக எம்பி கனிமொழி சோமு, மொழிக் கொள்கை மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்தார். இருமொழிக் கொள்கையின் பயன்களை சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சித்தார். மேலும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்தார்.
கூட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த கருத்துகள் அரசியல் வட்டாரத்திலும், சமூக ஊடகங்களிலும் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
